கண்ணையே பாத்திருக்க கையத்தான் கோத்துநின்னு
கனவாது வருமுன்னு கண்மூடி நாங்கிடக்க
கடுதாசி வந்திருக்கு எந்திரிய்யா ராசான்னு
கதவிடிச்சு சேதிசொல்ல ஆத்தாதான் வந்திருக்க
கனவுன்னே தெரியாத கனவொன்னு கலஞ்சுதேன்னு
கலஞ்சத் தலையோட கலையாம எந்திரிக்க
கவலையோடு கைப்பிடிச்சுக் கடுதாசிப் புடிய்யான்னு
கதவிடிச்சுக் கண்பாத்தக் கண்ணும் கலங்கிருக்க
கவலையான சேதியொன்னு அப்படித்தான் என்னன்னு
கடுதாசிப் பிரிச்சுப்பாத்து ஒவ்வொன்னா
நாம்படிக்க
கனவுன்னு நாநினச்ச வெளங்காத கதவொன்னு
கண்ணாலம் கட்டிகிட்ட கதையத்தான் சொல்லிருக்க
கண்ணெல்லாம் கொளமாக, கெட்டக் கனவுன்னு
கலஞ்சத் தலையத்தான் களஞ்சு மடிசாய்க்க
கண்மூடி நாங்கிடந்தா கனவொன்னு வருமேன்னு
கண்ணாடி பாக்கலான்னு கலங்கிப்போய் எந்திரிக்க
கண்ணோரம் வழிஞ்சிருந்த கண்ணாடித் துளியொன்னு
களஞ்சக் கைமேல கரஞ்சுக் கீறிவிழ
கனமுன்னு தாங்காம, பாதகத்தி அவளுன்னு
கத்திவிழும் ஆத்தாவ கெட்டியாக நாம்பிடிக்க
கலஞ்சே போனபின்னு கனவென்ன கனவுன்னு
கட்டிக்கத்தான் தோனுதம்மா கதவிடிச்ச
ஒன்னமட்டும்!
No comments:
Post a Comment