இனிப்புடன் இனிய ஆரம்பம்!
பசியைத் தூண்டவோ அல்ல
ருசியைக் கூட்டவோ என்றெல்லாம்
எனக்கில்லை வேகாதக் கவலை.
பச்சை இலையின் பச்சையம்
இச்சிடும்போது மிச்சமாவது என்
எச்சம் மட்டும் தான்!
காய்ந்து கிடந்த எனக்கு
காய் எல்லாம் கனிகள்!
பதம் பார்த்து உண்கையில்
இதமாக வருகிறது சாதம்!
ஆஹா என்ன வெளுப்பு
என்று எண்ணி முடிப்பதற்குள்
நெய்யும் பருப்பும் கலந்துவிட்டது!
என்ன உண்பதென்று குழம்புகையில்
திண்ணமாய் திரளுகிறது குழம்பு!
பல ‘ரசம்’ அறிந்தாலும்
பரவசமளிப்பது பழரசம் தான்!
அமுதமோ இது என்று
எண்ணி அங்கலாய்த்து அடங்குவதற்குள்
வண்ணமாய் வழிகிறது திருக்கண்ணமுது!
இனித்த ‘நா’க்கு புளிக்க
வரும் தயிர், புளிக்க
வேண்டாமெனில் ஊறுங்கள் ஊறுகாயில்!
சுவைப்பதற்கு மட்டுமின்றி கையில்
வழிவதை துடைப்பதற்கும் உமிழ்கிறது
வெள்ளம் போல் உமிழ்நீர்!
பச்சிலையை எச்சமிட்ட இதழ்கள்,
வெள்ளையடித்து அச்சிடுகிறது வெற்றிலையை!
வெளியில் சிவந்தது கன்னம்,
உள்ளே தெரிந்தது வண்ணம்,
வான்வெளியில் பறந்தது எண்ணம்,
உள்ளே தெரிந்தது வண்ணம்,
வான்வெளியில் பறந்தது எண்ணம்,
ஆஹா என்ன ருசி!
இப்படி வகையான வாழ்வையும்
சுவைக்கத் தெரிந்தால், வாழ்வும்
ஆஹா என்ன ருசி!- பசியுடன்,
வசுப்ரதா ரெங்கராஜன்.
No comments:
Post a Comment